வேலூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க வேண்டும் -உயர்நீதிமன்றம் உத்தரவு..!
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நாராயணபுரம் காலனி உள்ளது. இங்கு வாழும் பட்டியலினத்தவர்களுக்கு தனி சுடுகாடு ஒன்று உள்ளது. ஆனால் சுடுகாட்டில் போதிய வசதி இல்லாததால் அவர்கள் இறந்தவர்களை பாலாற்றங்கரை சுடுகாட்டிற்கு கொண்டு செல்கின்றனர். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பாக பாலாற்றை கடக்க பாலம் கட்டப்பட்டது.
இதனால் பாலத்தின் இருமருங்கிலும் ஆற்றுக்கு செல்லும் பாதைகளை விவசாயிகள் வேலி அமைத்து பாதையை மறித்து விட்டதால் இறந்தவர்களை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல பாலம் வழியாக உடலை இறங்கி சுடுகாட்டிற்கு செல்கின்றனர்.
இந்நிலையில் பாலத்தில் இருந்து உடலை இறங்கி எடுத்துச் சென்றது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு விட்டு உள்ளது.