நான் தமிழ் பள்ளி மாணவன்! தனது ஆசிரியரை பாராட்டிய முகன்!
நடிகர் கமலஹாசன் தொகுத்து விளங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 60 கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள முகன், தனது ஆசிரியரை பாராட்டி பேசியுள்ளார். அவர் பேசுகையில், ‘நான் ஒரு தமிழ் பள்ளி மாணவன். நான் ஆரம்பப்பள்ளி படிக்கும் போது, எனக்கு கணேஸ்வரி என்று ஆசிரியர் இருந்தார். அந்த நேரங்களில் எனது குடும்பதில் பிரச்னை நடந்துக்க கொண்டு இருந்தது.
அந்த காலகட்டத்தில், அந்த ஆசிரியர் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். தற்போது அந்த ஆசிரியரின் மகன் எனது நண்பன். இந்த பிக்பாஸ் மேடையில் அந்த ஆசிரியருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.