நேற்று இரவு கைது செய்யப்பட்ட சிதம்பரம் !இன்று நீதிமன்றத்தில் ஆஜர்
டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்படுகிறார்
ஐஎன்எக்ஸ் நிறுவனம் முறைகேடு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு முதல் சிபிஐ அதிகாரிகள் நான்கு முறைக்கு மேலாக ப.சிதம்பரம் வீட்டிற்கு சென்று அதிகாரிகள் சோதனையிட்டு நோட்டீஸ் ஒட்டினார்கள்.ஆனால் சிதம்பரம் அவரது வீட்டில் இல்லை.
முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.பின் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு நாளை விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.பின்னர் நேற்று சிதம்பரத்தின் வீட்டின் சுவர் ஏறி குதித்துவீட்டிற்குள் சென்று சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இதனையடுத்து இன்று டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்படுகிறார்.இன்று மதியம் வரை சிபிஐ அலுவலகத்தை விட்டு வெளியே அழைத்துவரப்போவதில்லை சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ப.சிதம்பரத்திற்கான மருத்துவமனை பரிசோதனை கூட சிபிஐ அலுவலகத்திலேயே நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.