சி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர்!
சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு சென்று ப.சிதம்பரத்தை கைது செய்துள்ளனர்.
ஐஎன்எக்ஸ் நிறுவனம் முறைகேடு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நேற்று இரவு முதல் சிபிஐ அதிகாரிகள் நான்கு முறைக்கு மேலாக ப.சிதம்பரம் வீட்டிற்கு சென்று அதிகாரிகள் சோதனையிட்டு நோட்டீஸ் ஒட்டினார்கள்.ஆனால் சிதம்பரம் அவரது வீட்டில் இல்லை. முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.பின் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு நாளை மறுநாள் விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த முயற்சி செய்து வரும் நிலையில் காங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.இதன் பின்னர் அவர் தனது வீட்டிற்கு வந்தார்.இதையறிந்த சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு செல்ல முயன்றனர் .உள்ளே அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சிதம்பரத்தின் வீட்டின் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் இல்லத்திற்குள் சென்றனர்.பின் சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு சென்று ப.சிதம்பரத்தை கைது செய்தனர்.