போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி: தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர்கள் தேவை
திருச்சி: தமிழகம் போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவிக்கப்படாத வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், தினக்கூலி அடிப்படையில் போக்குவரத்து ஊழியர்கள் தேவை என திருச்சி பணிமனையில் விளம்பரப்பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
ஊதிய நிலுவைத்தொகை, ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் போக்குவரத்து தொழிலாளர் சங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனால் அரசு கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். முன்னறிவிப்புமின்றி திடீரென பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர்.
போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், நிலைமையை சமாளிக்க, தினக்கூலி அடிப்படையில் பேருந்துகளை இயக்க ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் தேவை என திருச்சி பணிமனை மற்று பேருந்து நிலையத்தில் விளம்பரப்பலகை. வைக்கப்பட்டுள்ளது.