உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும்…! பிரேமலதா விஜயகாந்த் அதிரடி கருத்து..!
ஐ.என்.எக்ஸ் நிறுவனம் அந்நிய முதலீடு முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.இவரது மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி ரமணா விசாரணைக்கு வந்தது.ஆனால் இந்த வழக்கில் முன் ஜாமீன் மனுவை பிறப்பிக்க முடியாது என மறுத்தார்.
மேலும் இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முடிவு எடுப்பார் என நீதிபதி ரமணா தெரிவித்தார். அயோத்தி வழக்கு நடப்பதால் முன் ஜாமீன் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறினார்.
இதை தொடந்து பா.சிதம்பரம் மீது லுக் அவுட் நோட்டீஸ் சிபிஐ பிறப்பித்தது.இந்நிலையில் பா.சிதம்பரம் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறுகையில் , உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும் தப்பு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும் என கூறினார்.
மேலும் பா.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது பெரிய திட்டத்தை ஒன்றும் கொண்டு வரவில்லை என தெரிவித்தார்.