தனியார் தண்ணீர் லாரிகள் இன்று முதல் திடீர் வேலைநிறுத்தம்!
தனியார் தண்ணீர் லாரிகள் பல தண்ணீர் எடுக்க உரிமம் இல்லாத காரணத்தால் அவ்வப்போது சிறைபிடிக்க படுவதால், தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் லாரிகள் சங்கம் அணைத்து தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.
இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 4500 லாரிகள் பங்கேற்றுள்ளன. லாரிகள் வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் தண்ணீருக்கு பெரும்தட்டப்படு ஏற்படும் அபாயம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
தற்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், ‘ இன்னும் ஓரிரு நாட்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 45 லாரிகளுக்கு லைசன்ஸ் வழங்கப்படும் எனவும், இன்னும் சில இடங்களில் ஆழ்துளை கிணறுகள் தோண்டபடும் எனவும் தெரிவித்தார்.