உடனடி முத்தலாக் தடை சட்டத்தை தேர்வுக்குழுவுக்கு அனுப்புவதில் மத்திய அரசு தயக்கம்!

Default Image

 
கடந்தவாரம் வியாழக்கிழமை உடனடி முத்தலாக் தடைச் சட்டமசோதா மக்களவையில் விவாதங்கள், நிபந்தனைகளுக்குப் பின் நிறைவேறியது. இதையடுத்து, புதன்கிழமை மாநிலங்களவையில் தாக்கல் செய்த மத்திய அரசுக்கு 15 எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் எதிர்ப்பை தெரிவித்தன. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் கடந்த இரண்டு நாட்களாக மசோதாவை நிறைவேற்ற முடியாத நிலை உருவானது. புதிய சட்டத்தின் படி, ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் கூறும் ஆண்களுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாதபடி 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்ற சட்டவிதியை ஏற்க எதிர்க்கட்சியினர் மறுத்தனர்.
கணவர் மூன்று ஆண்டுகள் சிறை சென்றால் வீட்டுச் செலவை அரசு ஏற்குமா என எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் கேள்வி எழுப்பினார். முஸ்லீம் பெண்களை பாதுகாப்பதாக கூறி முஸ்லீம் குடும்பங்களை சிதறவைக்க பாஜக திட்டமிடுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, கணவனுக்கு தண்டனை விதிக்கும் நீதிபதியே மனைவிக்கு இழப்பீடு தொகையை நிர்ணயம் செய்வார் என்று கூறியதை எதிர்க்கட்சியினர் ஏற்கவில்லை. உடனடி முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்றத் தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தினர்.
இதையடுத்து இரண்டாவது நாளாக நேற்றும் மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது. இன்றும் மாநிலங்களவையில் உடனடி முத்தலாக் தடை மசோதா தொடர்பாக முடிவு எட்டப்படாவிட்டால், எதிர்க்கட்சிகளுக்குப் பணிய மத்திய அரசு தயாராக இல்லை. தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்காமல் இந்த மசோதாவை மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைப் போல் கிடப்பில் போட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் தேர்தல்களில் முஸ்லீம் சகோதரிகளின் சட்டரீதியான விடுதலையை எதிர்க்கட்சியினர் தடுத்து விட்டதாக பிரச்சாரம் செய்ய அரசியல் களத்தில் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும். ஆனால், இந்த மசோதா நிறைவேறினால் தங்களுக்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பிய முஸ்லீம் பெண்களுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.எனவே மத்திய அரசின் நிலைப்பாடு என்னவென்று பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும் ….
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்