ஆப்கானிஸ்தானில் பயங்கரம் !குண்டு வெடிப்பில் 20 பேர் பலி ….
ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
போலீசாருக்கு எதிராக போராட்டம் நடத்திய வணிகர்கள் மத்தியில் ஊடுருவிய தீவிரவாதி ஒருவன், உடலில் குண்டுகளைக் கட்டி வந்து வெடிக்கச் செய்ததாக அரசுத் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. குண்டுவெடிப்பு காரணமாக பதற்றமும் சோகமும் சூழ்ந்திருந்தது. காயம் அடைந்த பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதே போன்று சில நாட்களுக்கு முன்பு காபூலில் வழிபாட்டுத் தலம் அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 41 பேர் உயிரிழந்த நிலையில் இது இரண்டாவது தீவிரவாதத் தாக்குதலாகும்.
source: dinasuvadu.com