நடிகர் விவேக்கின் நீண்ட நாள் கனவு இதுதானாம்! இவரது கனவு நிறைவேறுமா?
நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகராவார். இவர் இயக்குனர் பாலசந்தர் இயக்கிய மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிகர் விவேக், ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி பிரபலங்களோடு நடித்துள்ளார்.
ஆனால், நடிகர் விவேக்கின் கனவே கமலோடு நடிக்க வேண்டும் என்பது தான். இவரது இந்த கனவை சில நிகழ்ச்சிகளில் பேசும்போது தெரிவித்துள்ளார். இந்நிலையில், சங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் கமல் நடிக்கிறார்.
இப்படத்தில் நடிகர் விவேக் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.