சென்னையில் மழை அடுத்த 48 மணிநேரத்திற்கு 12 மாவட்டங்களுக்கு மழை-வானிலை மையம்
தென்மேற்கு பருவ மழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த ஒரு வாரமாகவே நல்ல மழை பெய்து வருகிறது .
நேற்று இரவு சென்னையில் நல்ல கனமழை பெய்தது மற்ற மாவட்டங்களில் ,மிதமான மழை பெய்து வருகிறது .அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் கடலூர் ,விழுப்புரம் ,திருச்சி ,மதுரை ,திருவாரூர் ,சிவகங்கை,சேலம் ,நாமக்கல் ,கிருஷ்ணகிரி ,தர்மபுரி ,வேலூர் ,திருவண்ணாமலை ஆகிய 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் .சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது .
கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .பெய்து வரும் மழையை வீணாக்காமல் அதை சேமித்து நிலத்தடி நீரை உயர்த்த வேண்டும் என்பதே நம் கடமை .