பேட்டிங் , ஃபீல்டிங் பயிற்சியாளர் யார் என – வியாழன்கிழமை தெரியும் !
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ,துணை பயிற்சியாளர் மற்றும் பேட்டிங் போன்ற மற்ற துறைக்கான பயிற்சியாளர் பதவி காலம் நடந்து முடித்த உலகக்கோப்பை உடன் முடிந்த நிலையில் இந்த அனைத்து பதவிகளுக்கும் பிசிசிஐ விண்ணப்பங்கள் வரவேற்றது.
இதை தொடர்ந்து கடந்த சில நாள்களுக்கு முன் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தலைமையிலான குழு தலைமை பயிற்சியாளர் பதவிகான நேர்காணல் மும்பையில் நடைபெற்றது.இந்த குழு இறுதியாக மீண்டும் ரவி சாஸ்திரியை தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்தது.
இந்நிலையில் இந்திய அணிக்கு பேட்டிங் ,ஃபீல்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகிய துறைக்கான தேர்வு பயிற்சியாளர்களை எம். எஸ்.கே பிரசாத் தலைமையிலான தேர்வு குழு நேற்று முதல் தேர்வை தொடக்கி உள்ளது.இந்த பயிற்சியாளர்களின் தேர்வு முடிவு வருகின்ற வியாழன்கிழமை அறிவிக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.