தினக்கூலியாக ஓட்டுனர்கள், நடத்துனர்கள் தேவை : திருச்சி அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு
தமிழகம் முழுவதும் அரசு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் தமிழகம் முழுவதும், வேலைக்கு அரசு பஸ்ஸில் வேலைக்கு செல்லும் ஊழியர்கள், பள்ளி குழந்தைகள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் பெரும்பாலானோர் அரசு பஸ்ஸில் பயணம் செய்து கிராமபுறத்திலிருந்து திருச்சிக்கு வேலைக்கும் பள்ளி கல்லூரிகளுக்கும் வருபவர்கள். அவர்கள் இன்று பஸ் ஓடாததால் பெரும் சங்கடத்திற்கு உள்ளானார்கள்.
அதலால், தினக்கூலி அடிப்படையில் பணியாற்ற பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தேவை என்று திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் விளம்பர பலகை ஒன்று அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர்பாக மலைக்கோட்டை, கண்டோன்மெண்ட், தீரன் நகர், புறநகர் கிளைகளை அணுகலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் 99 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
source : dinasuvadu.com