திமுக என்பது பிரிவினவாதி கட்சி என்ற முத்திரை குத்தப்பட்ட கட்சி- அமைச்சர் ஜெயக்குமார்
திமுக என்பது பிரிவினவாதி கட்சி என்ற முத்திரை குத்தப்பட்ட கட்சி தான் என்றுஅமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், திமுக ஆட்சியில் இருந்த போது மதுரை பக்கமே போகாத ஸ்டாலின், ஜெயலலிதா ஆட்சியில் தான் அங்கு செல்லவே ஆரம்பித்தார்.ஸ்டாலினுக்கு எதற்கு இவ்வளவு பாதுகாப்பு என்று கேள்வி எழுப்பினார்.
அதுமட்டுமின்றி அதிமுக அரசு எந்தவித அச்சுறுத்தலும் இன்றி சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் சென்று வரும் அரசாக தான் உள்ளது.எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் இருந்தே திமுக என்பது பிரிவினவாதி கட்சி என்ற முத்திரை குத்தப்பட்ட கட்சி தான்.
பால் விலை குறித்து ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இதுகுறித்து உரிய விளக்கத்தை முதல்வரும், துறை அமைச்சரும் அளித்துள்ளனர். அதேபோல் பால் உற்பத்தியாளர்கள் விலையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கின்றனர்.எனவே இந்த விலையேற்றத்தை தடுக்க முடியாது. இது திமுக உள்ளிட்ட எந்த கட்சியின் ஆட்சியாக இருந்தாலும் இதனை பின்பற்றுவர் என்று தெரிவித்தார்.