நிலக்கரி நிறுவனத்தில் “வேலை வாய்ப்பு “!வெளியான போலி செய்தி!
சவுத் சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலிப் பணியிடங்கள் உள்ளதாக வெளியான செய்திகள் போலியான செய்தி என்று கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சவுத் சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலிப் பணியிடங்கள் உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது.அதாவது அந்த அறிவிப்பில்,88,585 காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இதை தொடர்ந்து கோல் இந்தியா லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஸ்ரீ அனில் குமார் ஜா விளக்கம் அளித்துள்ளார்.சமீபத்தில் காலியிட அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்று தெரிவித்துள்ளார்.
— Coal India Limited (@CoalIndiaHQ) August 17, 2019
அதாவது சவுத் சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலிபணியிடங்கள் இருப்பதாக வெளியான செய்தி போலி என்று கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு http://www.scclcil.in/ மற்றும் www.coalindia.in என்ற இணையதளத்திலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது