தெலுங்கு சினிமாவில் கௌசல்யா கிருஷ்ணமூர்த்தியாக களமிறங்க உள்ள ஐஸ்வர்யா ராஜேஷ்! ரிலீஸ் அப்டேட் இதோ!
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து சிவகார்த்திகேயன் தனது SK புரொடக்சன் மூலம் தயாரித்த முதல் படம் கனா. இந்த படத்தை அருண்ராஜா காமராஜா இயக்கி இருந்தார். இப்படம் பெண்கள் கிரிக்கெட்டை பற்றி எடுக்கப்பட்டது. படம் நல்ல வெற்றியை பதிவு செய்தது.
தற்போது இதே படம் தெலுங்கில் தயாராகிவிட்டது. தெலுங்கிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் நாயகியாக நடித்துள்ளார். இப்படம் முழுவதும் ரெடியாகி தற்போது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. இப்படம் இம்மாதம் 23ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.