திமுகவிற்குள் மட்டுமே மாற்றம் வரும்!ஆட்சி மாற்றம் வராது-அமைச்சர் ஜெயக்குமார்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
திமுகவிற்குள் மட்டுமே மாற்றம் வரும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,திமுகவிற்குள் மட்டுமே மாற்றம் வரும். ஆட்சி மாற்றம் வராது. பேரிடரின் போது பணியாற்றுபவர்களை பகையாளியாக பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும் .
யார் தவறு செய்தாலும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை போல் எடுக்கப்படும்.முதலமைச்சர் அமெரிக்கா செல்வது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்குத்தான்.
அதை கொச்சைப்படுத்தி கூடாது.முதல்வர் வளர்ச்சிக்காக வெளிநாட்டு பயணத்தை நல்ல விஷயமாக தான் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.