#BREAKING : பால் விலை உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.4 , எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தபட்டு உள்ளது என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் படி பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.28 இருந்து ரூ.32 ஆகவும் , எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35 இருந்து ரூ.41 ஆகவும் உயர்ந்து உள்ளது.
அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலையில் லிட்டருக்கு ரூ.6 உயர்ந்து உள்ளது.பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது என தமிழக அரசு அறிவிப்பு.
இந்த பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்வு திங்கட்கிழமை முதல் அமலுக்கு வர உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 1,700 உயர்வு!
March 31, 2025