சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோர் மீண்டும் இடம்பெற்றனர்!
இந்த வருடம் நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடருக்கான அணி வீரர்களை தக்க வைக்கும் நிகழ்ச்சி இன்று மும்பையில் நடைபெற்றது.
கடந்த 2015ஆம் ஆண்டு சூதாட்ட புகாரில் சிக்கிய இந்திய அணையின் முன்னால் கேப்டன்கள் ஆன டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 வருடம் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது. தடைகாலம் முடிந்து இந்தாண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் பங்கேற்க உள்ள நிலையில், இம்மாத இறுதியில் வீரர்களுக்கான ஏலம் நடைபெறுகிறது.
இதற்கு முன்னதாக இன்று நடைபெற்ற வீரர்களை தக்க வைக்கும் நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் கேப்டன் தோனி, நட்சத்திர வீரர்களான சுரேஷ் ரெய்னா, ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனை அவர்கள் சமூகவலைதளத்தில் #ThirumbiVandhutomNuSollu என்ற ஹேஷ்டேகில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
தக்கவைத்த மற்ற அணி வீரர்கள் (தற்போதைய) விவரம்:
சென்னை சூப்பர் கிங்ஸ்
➤தோனி, ரெய்னா, ஜடேஜா
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
➤டேவிட் வார்னர், புவனேஷ் குமார்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
➤விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், சர்ஃபராஸ் கான்
ராஜஸ்தான் ராயல்ஸ்
➤ஸ்டீவ் ஸ்மித்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
➤சுனில் நரேன், ஆண்ரே ரசல்
கிங்ஸ் இலவன் பஞ்சாப்
➤அக்ஸர் படேல்
மும்பை இந்தியன்ஸ்
➤ரோஹித் சர்மா, ஹர்டிக் பாண்ட்யா, பும்ரா
டெல்லி டேர்டேவில்ஸ்
➤ரிஷப் பேண்ட், ஷ்ரேயஸ் ஐயர், கிறிஸ் மோரிஸ்
➤ரிக்கி பாண்டிங் (தலைமை பயிற்சியாளர்)