அருண் ஜெட்லீ உடல்நிலை கவலைக்கிடம்?
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லீயின் உடல் நலம் தொடர்ந்து கவலைக்கிடமாக வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே அருண் ஜெட்லீ உடல் நலக்குறைவில்லை காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.இதன் காரணமாக இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்து விட்டார்.
இதனை அடுத்து கடந்த சில நாட்களாக சுவாசப் பிரச்சனை மற்றும் உடல் சோர்வால் பாதிக்கப்பட்டு வந்த அவர் ஆகஸ்ட் 9-ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.இதனால் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் அமைச்சர்கள்மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்கள்.மேலும் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவும் ஜெட்லீ உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.நேற்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நலம் விசாரித்தார்.
தொடர்ந்து அருண் ஜெட்லீயின் உடல் கவலைக்கிடமாக இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.நேற்று இரவுதான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் அருண் ஜெட்லீ உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.