சினிமாவில் வேண்டுமானால் கமல் முதல்வராகலாம்-அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

Default Image

சினிமாவில் வேண்டுமானால் கமல் முதலமைச்சர் ஆகலாம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் 2018 ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார்.தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம்  கட்சிக்கு “டார்ச் லைட்” சின்னமாக ஒதுக்கப்பட்டது.ஆனால் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டு தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் மதுரையில்  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,சினிமாவில் வேண்டுமானால் கமல் முதலமைச்சர் ஆகலாம் ,நிஜவாழ்க்கையில் முடியாது.முழுநேர அரசியல்வாதி எனக்கூறியவர் மீண்டும் சினிமா, தொலைக்காட்சியில் நடிக்கிறார்.

நடிகராக உள்ள கமலுக்கு நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. வரும் தேர்தல்களில் மக்களிடையே அவரது கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும் என்று  அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்