சென்னை தினம் உருவான விதம்.. !அது பற்றி ஒரு பார்வை…!
சென்னப்ப நாயக்கரின் மகன்களான ஐயப்ப நாயக்கர் மற்றும் வெங்கடப்ப நாயக்கர்களுக்கு சொந்தமாக ஒரு நிலப்பரப்பு இருந்தது. அந்த நிலப்பரப்பை அவரிடமிருந்து ஆகஸ்டு 22-ம் தேதி, 1639-ம் ஆண்டில் ஆங்கிலேயே வணிகரான பிரான்சிஸ் டே வாங்கினார்.
அவர் வாங்கிய அந்த நாள் தான் சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாயக்கர் சகோதரர்களிடமிருந்து பிரான்சிஸ் டே வாங்கிய இடத்தில் ஒரு கிடங்கு அமைத்து, அதில் வணிகம் செய்து வந்தார்.
அவர்கள் வணிகம் செய்த அந்த கிடங்கு தான், தற்போது தமிழ்நாட்டின் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை என்கிற தலைமைச் செயலகமாக செயல்பட்டு வருகிறது. மேலும், எழும்பூர் ரயில்வே நிலையம் வெடிகுண்டு குடோனாக இருந்தது. பின் சென்னை ஆங்கிலேயர் ஆட்சியின் கட்டுப்பாட்டிற்கு கீழ் சென்றது.
அதை தொடர்ந்து, தொழில் மற்றும் வணிக நகரமாக சென்னை மாறியது. தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாகவும் மாறியது. பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்னைக்கு தொழில் செய்ய வந்தனர்.
மேலும் சென்னை, வந்தாரை வாழ வைக்கும் சென்னையில் வணிகம், தொழில், மருத்துவம், நிதி நிறுவனங்கள், சினிமா, மென்பொருள் சேவை, வாகன தயாரிப்பு தொழிற்சாலைகள் என்று தற்பொழுது சென்னை பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றது.