ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வின் மாற்று தேதி அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மையம் (TNPSC) நடத்தும் பொறியியல் பணிகளுக்கான ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வு ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் நீகிரி மாவட்ட போட்டியாளர்க;ளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு, வேறொரு நாள் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் படி நீலகி மாவட்ட போட்டியாளர்களுக்கு மட்டும், ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வு ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெறும் என தற்போது டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மொத்தம் 481 பணியிடங்களுக்கு 82,594 பேர் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.