பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்!
நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆடை திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று, சாதனை படைத்துள்ளது. இப்படத்திற்கு எதிர்ப்புகள் இருந்தாலும், அதே அளவு வரவேற்பும் இருந்தது.
இந்நிலையில், இவர் மான்ஸ்டர் பட இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கும், தெலுங்கில் ஹிட்டான ஜெர்சி படத்தின் ரீமேக்காக உருவாக்கவுள்ள படத்தில் நடிக்கிறார். இப்படத்தில், நானி கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடிக்கவுள்ளார்.
மேலும், நடிகை அமலாபால் ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் கிரிக்கெட் வீரரை பற்றிய உணர்வுபூர்வமான கதையாக அமைந்திருக்கிறது. விஷ்ணுவிஷால் மற்றும் அமலாபால் இருவரும் ராட்சசன் படத்தில் இணைந்து நடித்ததற்கு பிறகு, மீண்டும் இப்படத்தில் இணைகின்றனர்.