biggboss 3: வனிதா அக்கா வந்து ஒரு வார்த்தை சொன்னதும் நீங்க பொங்கி எழுந்துருவிங்க! பொறுத்தது போதுமென பொங்கி எழுந்த லொஸ்லியா?

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியானது, 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியிலிருந்து ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட வனிதா விஜயகுமார் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார். இவர் இந்த வீட்ற்குள் வந்த உடனே கலவரம் ஆரம்பமானது. இவரது முதல் இலக்கே அபிராமி – முகன் காதல் தான். அபிராமியிடம் முகனை பற்றி வெளியில் நடத்த விடயங்கள் எல்லாவற்றையும் சொல்லி, இருவருக்கும் இடையே வன்முறையை தூண்டி விட்டுள்ளார்.
இந்நிலையில், வனிதாவின் வார்த்தையை கேட்டு, மதுமிதாவும், அங்குள்ள ஆண்களை மிகவும் மோசமான நிலையில் திட்டியுள்ளார். இதனையடுத்து, கவினுக்கு மதுமிதாவுக்கு இடையே மீண்டும் பிரச்னை எழுந்துள்ளது.
கவின் மதுமிதாவிடம், வீட்டில் உள்ள எல்லா ஆம்பளைகளும், பொம்பிளைகளை யூஸ் பண்ணுறது சொன்னிங்களே, அதுக்கு தான் சொல்றேன் அடுத்தவங்க பிரச்சனைய நீங்க ஏன் யூஸ் பண்ணுறிங்கனு கேட்டேன். சேரன் அண்ணா யாரை யூஸ் பண்ணுனாரு என கேள்வி கேட்கிறார். உடனே மதுமிதா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தவுடனே அமைதியாக இருந்த நீ இப்ப எதற்காக பிரச்னை பண்ணுகிறாய் என கேட்கிறார்.
உடனே கவின், நீங்களும் இவ்வளவு நாளும், அமைதியாக தானே இருந்தீர்கள். வனிதா அக்கா வந்தவுடனே தானே இப்படி பிரச்னை பண்ணுகிறீர்கள் என கேட்கிறார். இதனையடுத்து கோபம் கொண்ட லொஸ்லியா, வனிதா அக்கா ஒரு வார்த்தை சொன்னதும் நீங்க பொங்கி எழுந்துருவிங்க, இவ்வளவு நாளும் நீங்க வேற்று கிரகத்துலயா இருந்தீங்க என கேட்கிறார்.
#Day54 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/sZlaFYjVKJ
— Vijay Television (@vijaytelevision) August 16, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025