தமிழகத்தின் பிற பெரிய மாவட்டங்களையும் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும்-ராமதாஸ் கோரிக்கை
நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.அதில் ,வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையை தனித்தனி மாவட்டங்களாக பிரிக்கப்படும் .இந்த 2 புதிய மாவட்டங்களையும் சேர்ந்து தமிழகத்தில் மொத்தமாக 37 மாவட்டங்களாக உயரும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் முதலமைச்சரின் இந்த அறிவிப்பு பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரித்து ராணிப்பேட்டை திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
வேலூரை தொடர்ந்து தமிழகத்தின் பிற பெரிய மாவட்டங்களையும் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.