நீலகிரியில் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்-சீமான்
தென்மேற்கு பருவ மழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது.தமிழகத்தை பொறுத்தவரை கோவை,நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்தது. நீலகியில் கனமழையால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளதால் அவற்றை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.பல்லாயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரியில் மழை வெள்ள பாதிப்புகளை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையிட்டார்.இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நீலகிரியில் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து அதன் அடிப்படையில் இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.சேதமடைந்த வீடுகளுக்கு மட்டும் இழப்பீடு வழங்கக் கூடாது, அவர்களது உடைமைகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.