ஈரானில் உடற்பயிற்சி மையத்தில் ஒளிபரப்பான தளபதி விஜயின் பாடல்! அட்டகாசமாக நடனமாடும் வீரர்கள்!
ஈரானில் உள்ள ஒரு உடற்பயிற்சி மையத்தில், தளபதி விஜயின், போக்கிரி படத்தில் இடப்பெற்ற மாம்பழம்மா மாம்பழம் பாடலுக்கு அங்கு பயிற்சி பெற வந்த அனைவரும் நடனமாடுகின்றனர். இதனை மஹிந்திரா குழுமத்தின் தலைவர், ஆனந்த் மஹிந்திரா தனது ட்வீட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், நீங்கள் தீவிரமாக இருக்கிறீர்களா? நான் இதை விரும்புகிறேன். நானும் இதனை எனது புதிய காலை வழக்கமாக மாற்ற போகிறேன் என்றும், படுக்கையில் இருந்து வெளியில் சென்ற இது போல தமிழ் இசையில் பயிற்சி செய்ய போகிறேன் என பதிவிட்டுள்ளார்.
இந்த பாடலின் ஒரிஜினல் வீடியோ 53 வினாடிகளை கொண்டதாக உள்ளது. இந்த வீடியோ ஈரானில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது. அங்கு நடனமாடும் வீரர்கள், விஜய் நடனமாடுவதை போலவே நடனமாட முயற்சி செகின்றனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ,
Are you serious? I love it. I’m going to make it my new morning routine. Going to get out of bed, put on some Tamil music & bounce out to meet the new day! @shivithukral https://t.co/JReqG0rmQE
— anand mahindra (@anandmahindra) August 14, 2019