பிரபாஸின் சாஹோ திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமம் மட்டும் 100 கோடியை தாண்டியதா?!

பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு மீண்டும் ஒரு பிரமாண்ட படத்தில் நடித்து முடித்துள்ளார் சாஹோ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை சுஜித் இயக்கி உள்ளார். சுமார் 400 கோடி பட்ஜெட்டில் இப்படம் பிரமாண்டமாக தயாராகி உள்ளது.
இப்படம் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகா உள்ளது. இப்படத்தின் வியாபாரம் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் வண்ணம் பெருந்தொகைக்கு படம் கைமாறி வருகிறது. இப்படத்தின் டிவி டெலிகாஸ்ட் உரிமம் மட்டும் 125 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாம். இதுதான் இந்திய சினிமாவின் உயர்ந்த தொகை கூறப்படுகிறது.