ட்விட்டரில் மோடி மற்றும் அமித்ஷா எதிராக கருத்து தெரிவித்த ரேப்பர் உட்பட 4 பேர் ட்விட்டர் முடக்கம்!

Default Image

ஜம்மு -காஷ்மீர் கொடுக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை மத்தியஅரசு நீக்கியதை தொடர்ந்து ஜம்மு மற்றும் லடாக் தனி யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாகவும் , எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரேப்பர் ஹார்ட் கவுர் (rapper Hard Kaur ) என்பவர் தனது ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக அவதூறான வீடியோ மற்றும் கருத்துக்களை வெளியிட்டதால் ரேப்பர் ஹார்ட் கவுரின் ட்விட்டர் கணக்கு செவ்வாய்க்கிழமை முடக்கம் செய்யப்பட்டது.

Image result for Twitter Suspended

அவர் வெளியிட்ட வீடியோவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்காக இருந்தது.மேலும் இவர் அரசியல்வாதிகளை அவதூறான வீடியோ மற்றும் கருத்துக்களை வெளியிடுவது .இது முதல் முறை அல்ல.

கடந்த ஜூன் மாதம் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோருக்கு அவதூறான  கருத்துக்களை பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for Twitter Suspended

ஜம்மு -காஷ்மீர் தொடர்பாக எதிரான பதிவுகள் வெளியிட்ட 4 பேரின் ட்விட்டர் கணக்குகள் இடைக்கலமாக முடக்கப்பட்டது. இது பாதுகாப்பு அதிகாரிகளின் கோரிக்கையை கொண்டு ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்து உள்ளது.மேலும் 4 பேரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம் செய்வதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்