biggboss 3: கொதித்தெழுந்த லொஸ்லியா! நான் சம்பந்தப்பட்ட விஷயத்தை யாரும் கதைக்க வேண்டாம்!
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். மேலும், இந்த வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வனிதா விஜயகுமார் வருகை தந்துள்ளார்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் கவினுக்கும், மதுமிதாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கவின் மதுமிதாவிடம், இந்த பிரச்சனைய யாருயாரு யூஸ் பண்றங்கனு பாக்கணும். இதனையடுத்து, மதுமிதா, கவினிடம், நன்கு பெண்களை யூஸ் பண்ணிட்டு வந்து, உங்கள மாதிரி இங்க ஸ்டே பண்ற ஆள் இல்ல நான் என கூறுகிறார்.
இதனையடுத்து, முடிந்த கதையை பேச வேண்டாம் என ஷெரின் கூறுகிறார். இந்நிலையில், லொஸ்லியா வந்து, ப்ராப்ளேம் இருந்த மக்கள் வெளிய அனுப்புவாங்க. இது என் சம்மந்தப்பட்ட விஷயம், அத பத்தி நீங்க பேச வேண்டாம். எனக்கு தெரியும் என கூறுகிறார்.
#Day52 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/FASVa6kbt9
— Vijay Television (@vijaytelevision) August 14, 2019