செல்போனால் குளியல் வாளியில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சோகம்!
திருவள்ளூர் மாவட்டம் வெங்கால் பகுதியை சார்ந்த முருகன்.இவரது ஒன்றரை வயது மகன் அருண்.முருகன் வாளில் தண்ணீரை வைத்து அருணை குளிப்பாட்டுவது வழக்கம்.இதை தொடர்ந்து நேற்றும் முருகன் வாளில் முழுவதும் தண்ணீர் நிரப்பி வைத்து அருணை குளிப்பாட்ட தயாராக இருக்கும் போது முருகனுக்கு ஒரு போன் கால் வந்து உள்ளது.
முருகன் அப்போது போன் பேச சென்று விட்டார் தனியாக இருந்த அருண் வாளில் நிரப்பி இருந்த தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடி கொண்டு இருந்தார்.அப்போது முருகன் அருணை அழைத்து உள்ளார்.அருண் எந்தவிதமான சத்தமும் கொடுக்காததால் முருகன் ஓடிப்போய் சென்று பார்த்தார்.
அப்போது உயிருக்கு போராடி கொண்டு இருந்த அருணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார்.ஆனால் குழந்தை பரிதாபமாக உயிர் இழந்தது.குழந்தை மூழ்கிய நேரத்தில் முருகன் மனைவி சமையல் அறையில் இருந்ததால் அருணை கவனிக்க முடியாமல் போய்விட்டது.இந்த சம்பவம் வெங்கால் பகுதியை பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.