பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்!தாக்குதலில் 12பேர் பலி ….
ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த 50 வயதான தலைமைக் காவலர் ஆர்.பி. ஹஸ்ரா என்பவர் பாகிஸ்தான் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி தரும் விதமாக பாகிஸ்தானைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் நிலைகளை குறி வைத்து இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் இன்று தாக்குதல் நடத்தினர். இதில் பாகிஸ்தான் படையினர் 12 முதல் 15 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை ஐ.ஜி. ராமவ்தார், நேற்று பணியில் இருந்த எல்லைப் பாதுகாப்புப் படை தலைமைக் காவலர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அதற்கு தக்க பதிலடி தரும் விதமாக தங்கள் படையினர் இன்று தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குலில் பாகிஸ்தான் நிலைகளின் உள்கட்டமைப்புக்கள் பெரியளவில் சேதப்படுத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
source: dinasuvadu.com