போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரிதுறையினர் சோதனை!
முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் சீல் வைக்கப்பட்டிருந்த 3 அறைகளில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்திற்கு பிற்பகலில் 12.30 நிமிடத்திற்கு வருமான வரித்துறை இணை ஆணையர் தலைமையில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழு வந்தது.வருமான வரித்துறை அதிகாரிகள் வந்ததை அடுத்து அந்த பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட சோதனையின் போது சசிகலா, பூங்குன்றன் ஆகியோரின் அறைகளில் சோதனை நடந்தது.மேலும் 3 அறைகளுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்திருந்தனர். இதையடுத்து அங்கு மீண்டும் சென்றுள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்த ஜெயா டிவியின் பழைய அலுவலகம் உட்பட 3 அறைகளில் ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர்.
ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை அரசுடைமை ஆக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் வருமான வரித்துறையினர் இறுதி கட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
source: dinasuvadu.com