மூத்த கலைஞர்களுக்கான உதவித்தொகை ரூ.2000-லிருந்து, ரூ.3000-மாக உயர்த்தி வழங்கப்படும்-முதலமைச்சர் பழனிசாமி
மூத்த கலைஞர்களுக்கான உதவித்தொகை ரூ.2000-லிருந்து, ரூ.3000-மாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவிதித்துள்ளார்.
இயல், இசை, நாடகம், கலைத் துறையைச் சேர்ந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது .இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரில் கலைமாமணி விருது வழங்கப்படும் .
மேலும் மூத்த கலைஞர்களுக்கான உதவித்தொகை ரூ.2000-லிருந்து, ரூ.3000-மாக உயர்த்தி வழங்கப்படும்.கலைமாமணி விருது 3 சவரனுக்கு பதிலாக, 5 சவரன் ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.