அசத்தலான முட்டை உருளை மசாலா செய்வது எப்படி தெரியுமா?
நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிலும், காய்கறிகளிலேயே உருளைக்கிழங்கை பயன்படுத்தி செய்கின்ற அனைத்து உணவுகளையும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவதுண்டு.
தற்போது இந்த பதிவில் சுவையான முட்டை உருளை மசாலா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- முட்டை – 2
- உருளைக்கிழங்கு – 200 கிராம்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- மிளகு – 1 டீஸ்பூன்
- வினிகர் – 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
- வெங்காயம் – 100 கிராம்
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் முட்டையை நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின், பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், மிளகு, சீரகம் வறுத்து, அதில் நறுக்கிய வெங்காயத்தில் பாதியை போட்டு வதக்க வேண்டும்.
அதன் பின் உருளைக்கிழங்கு மற்றும் முட்டையை போட்டு வதக்க வேண்டும். பின் மீதியுள்ள வெங்காயத்தை போட்டு பிரட்டி, வினிகர் சேர்த்து இறக்க வேண்டும். இப்பொது சுவையான முட்டை உருளை மசாலா தயார்.