காவலரை ஒருமையில் திட்டிய காஞ்சிபுரம் கலெக்டருக்கு பதிலடி கொடுக்க வெளியான புதிய வைரல் வீடியோ!
காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கூட்டநெரிசல் காரணமாக பொதுமக்கள் சிலரை விஐபி தரிசன வரிசையில் அனுமதித்ததாக கூறப்படுகிறது. இது தெரிந்து பாதுகாப்பு ஏற்பாடுகளில் மெத்தனப்போக்கு இருப்பதாக அந்த காவலரை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஒருமையில் திட்டிய வீடியோ வைரலாக பரவியது.
காவல் ஆய்வாளரை திட்டிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது குடும்பத்தினரை, பாஸ் இல்லாமல், தனது அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி விவிஐபி நுழைவு வாயில் வழியாக அழைத்துச் செல்லும் காட்சியை போலீசார் வெளியிட்டுள்ளனர். #AthiVaradarDarshan #PoliceVsCollector #Kanchipuram pic.twitter.com/7Yzoq2OWsn
— Mahalingam Ponnusamy (@mahajournalist) August 11, 2019
இதற்க்கு பதிலடியாக போலீசார் தரப்பில் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தனது குடுமபத்தினரை பாஸ் இல்லாமல் அத்திவரதரை தரிசிக்க விஐபி வாரிசையில் சென்றார்கள் என பதிவிடப்பட்டுள்ள்ளது. இந்த விடியோவும் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இதெல்லாம் அந்த கலெக்டர் கண்ணுக்கு தெரியாதா???…
ஆய்வாளரை திட்டிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு பதில் அளிக்கும் வகையில் போலீசார் வெளியிட்ட வீடியோ.. #AthiVaradarDarshan #Police #Athivarathar #Kanchipuram pic.twitter.com/zHCIFfWo4F
— Mahalingam Ponnusamy (@mahajournalist) August 10, 2019