நீலகிரி வெள்ள பாதிப்பு: இன்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு
நீலகிரி வெள்ள பாதிப்புகளை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்கிறார்.
நீலகிரியில் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக அவலாஞ்சி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.இதனால் அங்குள்ள பல பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளதால் அவற்றை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்தில் ஆய்வு செய்தார்.இந்த நிலையில் இன்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் நீலகிரி மாவட்டத்தில் ஆய்வு செய்கிறார்.இதனால் உதகையில் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோருடன் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆலோசனை செய்து வருகிறார் .