பாலிவுட்டில் களமிறங்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி! அதுவும் பாலிவுட் டாப் ஹீரோ படத்தில்!
தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிஸியான நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இவரது நடிப்பில் கடைசி விவசாயி, லாபம், சங்கத்தமிழன், சைரா நரசிம்ம ரெட்டி, மார்க்கோனி மத்தாய் ( மலையாளம்). என பிசியாக நடித்து வருகிறார்.
இவர் தற்போது, பாலிவுட்டிலும் நடிக்க உள்ளாராம். அதுவும் அமிர்கான் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவராகவே கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளாராம். விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது விக்ரம் வேதா ரீமேக்கில் பாலிவுட்டில் வேதாவாக களமிறங்க உள்ளார் அமீர்கான். அதனால் விஜய் சேதுபதியை சந்தித்து வேதா கதாபாத்திரத்திற்கு எப்படி தயாரானீர்கள் என கேட்டபோது, மக்கள் செல்வன் சொன்ன விதமும், அதற்காக அவர் மெனக்கெட்டதும் அமீர்கானுக்கு பிடித்து போக கண்டிப்பாக என்னுடைய படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என விஜய் சேதுபதியிடம் கேட்க, அவரும் அமிர்கானிடம் ஓகே சொல்லியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் விஜய் சேதுபதியை பார்த்து, ‘ இவரை போல ஒரு நல்ல நடிகரை வாழ்நாளில் பார்த்தது இல்லை; என பாராட்டி இருந்தார்.