மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின் சேதங்களை மதிப்பீடு செய்து நிவாரணம் வழங்கப்படும்-முதலமைச்சர் பழனிசாமி
கோவையில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட்டால் முக்கொம்பு கதவணையில் பாதிப்பு ஏற்படாது. முக்கொம்பு கதவணையில் 71 கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வெள்ள பாதிப்புகள் மற்றும் நிலச்சரிவு குறித்து துணை முதலமைச்சர் விரிவாக ஆய்வு செய்ய உள்ளார் .விளம்பரத்திற்காகவே ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்திற்கு சென்றார்
ஆனால், அமைச்சர்கள் பாதிப்பு நடந்த அடுத்த நாளே அங்கு முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டார்கள்.மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின் சேதங்களை மதிப்பீடு செய்து நிவாரணம் வழங்கப்படும். வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்து மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்படும்