ஒரு ஷேர் ஆட்டோவில் 24 பேர் பயணம்! அபராதம் விதித்த காவல்துறையினர்! வைரலாகும் வீடியோ!
சாலை விபத்துக்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காகவும் அரசு பல்வேறு சாலை விதிகளை விதித்து வருகிறது. இந்நிலையில், தெலுங்கானா மாநிலம், புவனகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 24 பேர் திருமண விழாவில் கலந்து கொண்ட பின், இவர்கள் அனைவரும் ஒரே ஷேர் ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளனர்.
ஒரு ஷேர் ஆட்டோவில் 6 பேர் மட்டுமே வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆட்டோவில் 24 பேர் வந்ததை, அந்த சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்தனர். இதனையடுத்து, அந்த ஆட்டோ ஓட்டுனரை போலீசார் எச்சரித்ததுடன், அவருக்கு அபராதமும் விதித்துள்ளனர்.
இதனையடுத்து, இதனை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக பதிவிட்டுள்ளார். இந்நிலையில், இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
How many passengers an auto can fill any guess? Alertizen found 24 passengers, all women and children travelling in an Auto in Bhongir. (Motor Vehicles Bill 2019 ask for a fine of Rs 1000/Extra passenger in case of overloading) #Telangana. @TelanganaDGP @tkp1080 #RoadSafety pic.twitter.com/MR2fLid0Nv
— Aashish (@Ashi_IndiaToday) August 11, 2019