மனிதநேயம் இன்னும் மாண்டுபோகவில்லை! வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தந்தையாக மாறிய காவலர்! குவியும் பாராட்டுக்கள்!

இந்த உலகில் உதவும் மனப்பான்மை கொண்ட பல உள்ளங்கள் இருப்பதால் தான் இன்னும் உலகம் சுழன்று கொண்டு இருக்கிறது. பலரும் மனிதாபிமானம் இலலாமல் போயிற்றோ என்ற கேள்வி எழுப்பலாம். ஆனால், இந்த கேள்விக்கு பதிலாக இன்றும் பலர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், குஜராத் மாநிலம் கல்யாண்ப்பூர் கிராமத்தில், பிருத்விராஜ் ஜடேஜா என்ற காவலர் வெள்ளத்தில் தத்தளித்த இரு பெண் குழந்தைகளை தோளில் சுமந்தபடி தூக்கி சென்று கரை சேர்த்துள்ளார்.
இந்த காவலர், இடுப்பளவு தண்ணீரில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல், ஒன்றரை கிலோமீட்டர் தூரம், குழந்தைகளை தொழில் சுமந்தவாறு நடந்து வந்துள்ளார். இதுகுறித்து காவலர் ஜடேஜா அவர்கள் கூறுகையில், கல்யாண் சாலையில் 40 பேர் வெள்ளத்தில் சிக்கியிருப்பதாக தகவல் வந்தது.
இதனையடுத்து, எங்கள் குழுவினர் அங்கு உடனடியாக விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டோம். அங்கு வேறு எந்த யோசனையும் எழவில்லை. அனைவரும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்ததால் தான் குழந்தைகளை தோளில் தூக்கி வந்ததாக கூறியுள்ளார்.
இவரது இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிற நிலையில், இவரது இந்த செயலை பார்த்த பல அரசியல் பிரபலங்கள் மற்றும் திரைப்பலங்கள் என பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். மேலும், இது போன்ற காவலர்களுக்கு சம்பளத்தை அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
பவர்பிளேக்கு முன்னாடி அவுட் ஆகுறீங்க… ரோஹித் ஷர்மாவுக்கு விமர்சித்து அட்வைஸ் கொடுத்த கவாஸ்கர்!
April 8, 2025