குடித்து விட்டு நடிகையை அடித்து உதைத்ததால் கணவர் கைது!

Default Image

இந்தி நடிகை ஸ்வேதா திவாரி இவர் நாகினி உட்பட பல இந்தி சீரியலில் நடித்து உள்ளார்.இவர் இந்தியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஸ்வேதா திவாரி நடிகர் ராஜா சவுத்ரியை காதலித்து  1998-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஒன்பது வருடம் கழித்து  இருவரும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2007-ம்  விவாகரத்து செய்து விட்டார்.

இவர்களுக்கு பாலக் என்ற மகளும் உள்ளார்.பின்னர் ஸ்வேதா திவாரி 2013 -ம் ஆண்டு நடிகர் அபினவ் கோலியை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் நடிகர் அபினவ் கோலி தினமும் குடித்து விட்டு வந்து தன்னையும் , தன் மகளையும் அடித்து துன்புறுத்துவதாக நடிகை ஸ்வேதா திவாரி மும்பையில் உள்ள காந்திவிலி காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் கொடுத்து உள்ளார். நடிகை ஸ்வேதா திவாரி கொடுத்த புகாரை விசாரித்த போலீசார்  அபினவ் கோலியை கைது செய்தனர்.

Shweta Tiwari lodges police complaint against husband Abhinav Kohli for abusing daughter Palak

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்