உடல் எடையை வெகுவாக குறைத்து வரும் தேசிய விருது நடிகை! எந்த படத்திற்கு?!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பின்னர் தெலுங்கிலும் மிகவும் பிஸியான நடிகையாக நடித்து வந்தார். சென்ற வருடம் தமிழ் தெலுங்கில் வெளியான மகாநதி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் தற்போது அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பாலிவுட்டில் தனது கவனத்தினை செலுத்தி வருகிறார். பாலிவுட் ஹீரோயின்கள் எப்போதும் ஒல்லியான தேகத்துடன் தான் இருப்பார்கள். ஆதலால் கீர்த்தியும் முன்பைவிட தற்போது மிகவும் ஒல்லியாக மாறிவருகிறாராம், ஏற்கனவே 5 கிலோ குறைந்துவிட்டாராம். மீண்டும் தீவிர உடற்பயிற்சியில் இறங்கியுள்ளாராம்