சென்னையில் வடமாநில இளைஞர் குமபல் ஆயுதங்களை காட்டி கொள்ளை முயற்சி! 11 பேர் கைது……
பல்லாவரத்தில் வடமாநில இளைஞர் கும்பல் ஆயுதங்களை காட்டி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்..இதில் சுமார் 20 பேர் அடங்கிய குழுவில் 11 பேர் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பல்லாவரத்தில் வடமாநில இளைஞர் குமபல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். சுமார் 20க்கும் மேற்பட்டோர் இந்த துணிகர செயலில் ஈடுபட்ட நிலையில்,11 பேர் சிக்கியுள்ளனர்.சென்னை பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கத்திற்கு செல்லும் சாலையில் உள்ள இரும்பு கிடங்கிற்கு பழைய இரும்பு பொருட்களை வாங்க பாபு என்பவர் தனது லாரியில் சென்றுள்ளார்.அப்போது அங்கு கர்நாடகா பதிவெண் கொண்ட ஐந்து கார்களில் 20க்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர் வந்திருக்கின்றனர்.
அங்குள்ள பழைய இரும்பு பொருட்களை கடத்த ஒத்துழைக்குமாறு அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி பாபு, ஆருண், ரிஸ்வான் ஆகிய மூவரையும் மிரட்டியுளளனர். இதில் ஆருண், ரிஸ்வான் ஆகிய இருவரையும் மிரட்டி கொள்ளையர்கள் காருக்கு அழைத்து சென்றபோது பாபு ரகசியமாக காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் கொள்ளையர்களை சுற்றி வளைத்துள்ளனர்.இதில் 11 வடமாநில கொள்ளையர்கள் சிக்கியுள்ளனர் . இவர்களுடன் வந்த மேலும் 10க்கும் மேற்பட்டோர் கார்களில் தப்பிவிட்டனர்.சிக்கியவர்கள் பயன்படுத்திய 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் வைத்திருந்த கத்திகள் நீளமான அரிவாள்,இரும்பு ராட் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிப்பட்ட 11 பேரும் கைது செய்யப்பட்டு உடனடியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.இதனையடுத்து தப்பி ஓடியவர்களை பல்லாவரம் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
source: dinasuvadu.com