பணம் சம்பாதிக்க தண்டவாளத்தில் சிலிண்டர் வைத்து வீடியோ எடுத்த இளைஞர் கைது!

திருப்பதியில் யூடியூப்பில் அதிகமான பார்வையாளர்களை கவரும் எண்ணத்தில் தண்டவாளத்தில் பைக் , கேஸ்  சிலிண்டர்  போன்றவை வைத்து ரயிலை மோத விட்டு வீடியோ எடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சித்தூர் மாவட்டம் ஏர்பேடு பகுதியை சார்ந்த ராமிரெட்டி என்ற இளைஞர் மென்பொருள் ஊழியராக வேலை செய்து வருகிறார்.அவர் பணம் சம்பாதிக்க யூடியூப்பில் பார்வையாளர்களை கவரும் விதத்தில் விடீயோக்களை பதிவிட்டு வந்து உள்ளார்.

Image result for gas cylinder train track

இந்நிலையில் சமீபத்தில் தண்டவாளத்தில் பைக் , கேஸ்  சிலிண்டர்  போன்றவை வைத்து ரயிலை மோத விட்டு அந்த வீடியோ யூடியூப்பில் பதிவிட்டு உள்ளார்.அவர் செய்த இந்த செயலால் ரயில் கவிழ கூடிய நிலை ஏற்பட்டு இருந்திருக்கலாம் என பலர் கூறியதால் அவர் பதிவிட்ட விடீயோக்களை ஆதாரமாக வைத்து போலீசார் ராமிரெட்டியை கைது செய்தனர்.

மேலும் போலீசார் விசாரணையில் ராமிரெட்டி கூறுகையில் பார்வையாளர்களை கவர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இது போன்று வீடியோ எடுத்ததாக கூறினார்.