இரண்டு அவிச்ச முட்டையின் விலை ரூபாய் 1700 மட்டுமே
உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா ? அந்த 2 வாழைப்பழம் கதை ஐயோ நீங்க நினைக்கிற மாதிரி கவுண்டமணி செந்தில் வாழைப்பழம் கதையில்ல சண்டிகரில்கடந்த சில நாட்களுக்கு முன் பாலிவுட் நடிகர் ராகுல் போஸ் போட்ட வீடியோ பதிவு வைரலானது. அதே மாதிரி இங்க வாழைப்பழம் இல்ல சற்று மாறுதலாக அவிச்ச முட்டை .
ஆமாங்க மும்பையில் ” Four Season ” என்ற உணவகத்தில் இரண்டு அவிச்ச முட்டையின் விலை 1,700 மட்டுமே என்ன ஷாக் ஆகிட்டீங்களா இதுக்கே எப்படி இன்னும் ஆம்ப்லேட் லா இருக்கு .
சில நாட்களுக்கு முன் பாலிவுட் நடிகர் ராகுல் போஸ் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் நான் தங்கியிருக்கும் ஹோட்டலில் இரண்டு வாழைப்பழங்கள் கேட்டேன் அதன்படி வாழைப்பழமும் வந்தது கூடவே பில்லும் வந்தது.பில்லில் இரண்டு வாழைப் பழத்தின் விலை ரூ.442 இருந்ததால் இதை சாப்பிட நான் தகுதியானவன் தானா என தெரியவில்லை என கூறி வீடியோ பதிவிட அது வைரலானது .
இந்த வீடியோ வை பார்த்த ஆதிகாரிகள் அந்த ஹோட்டல் மீது 25,000 ரூபாய் அபராதம் விதித்தனர் .இந்த வாழைப்பழ கதை போல இரண்டு அவிச்ச முட்டை விலை 1700 என்று கார்த்திக் தார் என்பவர் பதிவிட்டு நடிகர் ராகுல் போஸ்ஸை டேக் செய்து சகோதரே நாம் இதற்க்கு எதிராக போராடலாமா என்று கேட்டுள்ளார்.
2 eggs for Rs 1700 at the @FourSeasons Mumbai. @RahulBose1 Bhai Aandolan karein? pic.twitter.com/hKCh0WwGcy
— Kartik Dhar (@KartikDhar) August 10, 2019
வாடிக்கையாளர்கள் மீது மிகுந்த அக்கரை கொண்ட அந்த உணவகம், ஆம்ப்லேட் விலையை உயர்த்தாமல் 1700 மட்டும் போட்டிருக்கிறது என்ன ஒரு இரக்க குணம் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.