கேரளாவில் கனமழை எதிரொலி : வெள்ளப்பெருக்கில் இதுவரை 60 பேர் உயிரிழப்பு
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தென் மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது.இதன்விளைவாக கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது.
கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. 8-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் சேதமடைந்துள்ளது.குறிப்பாக வயநாடு மாவட்டம் பெரும் சேதத்துக்கு உள்ளாகி உள்ளது.மழையால் பல மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.மழை வெள்ளத்தில் பலர் காணாமல் போயுள்ளனர். ராணுவம், விமானப்படை, கடற்படை என அனைத்து படைகளும் தேடும் பணி மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். பல இடங்களில் பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.