2000 கோடி என்ற புதிய இலக்கை நிர்ணயித்த தங்கல் திரைப்படம்
சென்ற ஆண்டு அமீர்கான் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த படம் ‘தங்கல்’ இப்படம் வசூலில் 2000கோடி வசூல் செய்து புதிய சாதனையை படைத்துள்ளது.
இப்படம் சமீபத்தில் சீனாவில் வெளியானது. அங்கு வெளியான ஹாலிவுட் திரைப்படங்களை விட பெரும் வரவேற்ப்பை பெற்று சாதனை படைத்துள்ளது. 2017ம் வருட சீனாவின் IMDb இணையதள ரேட்டிங்கில் தங்கல் முதலிடம் பிடித்துள்ளது.
இந்த திரைபடம், ஒரு குஸ்தி வீரர், தன் மகள்களை சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லும் அளவுக்கு எப்படி பயிற்றுவிக்கிறார் என்பதை காட்டும் விதமாக படமாக்கபட்டிருக்கும்.
இப்படம், முதலிடம் பிடித்துள்ளதை பல ஹாலிவுட் இணையதளங்கள் ‘சீன மக்கள் ஹாலிவுட் படங்களை தாண்டி இன்னும் நிறைய எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்’ என தங்கல் பற்றி புகழ்ந்து செய்திகள் வெளியாகியுள்ளன.
source : dinasuvadu.com