கனமழை : வெள்ளத்தில் அடித்து சென்ற கல்லூரி விடுதியின் சுற்று சுவர் !

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது.
கோவையில் உள்ள சிங்காநல்லூர் , ஒண்டிபுதூர், சூலூர் ஆகிய பகுதிகளில் நொய்யல் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளதால் பாலம் தெரியாதபடி வெள்ளம் செல்வதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் விடுதியில் உள்ள சுற்று சுவர் இடிந்து விழுந்து தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டது.அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
மேலும் கோவையில் பல இடங்களில் கன மழை காரணமாக மரங்கள் விழுந்து கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025